Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சிலிண்டர் வெடித்து தீ விபத்து…. 2-ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை…. குமரியில் பரபரப்பு…!!

சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2-ஆக உயர்ந்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பெருவிளை பகுதியில் சபிக் என்பவர் வசித்து வருகிறார் இவர் பார்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் டீக்கடை நடத்திய வருகிறார். இந்த டீ கடையில் மூசா(47), சேகர்(52), பிரவீன்(25) ஆகியோர் ஊழியர்களாக வேலை பார்த்து வந்தனர். கடந்த மாதம் 17-ஆம் தேதி கடையில் உள்ள கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீ பிடித்து எரிந்தது.

சிறிது நேரத்தில் கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்ததால் மூசா, சேகர், பிரவீன் மற்றும் டீ குடிப்பதற்காக வந்த சுசிலா(50), சசிதரன்(63), சுதா(43), பக்ருதீன்(35), சுப்பையா(66) ஆகிய 8 பேரும் படுகாயமடைந்தனர். கடந்த 24-ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சசிதரன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் நேற்று காலை சுப்பையா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2-ஆக உயர்ந்தது.

Categories

Tech |