நாட்டில் உள்ள பொது மக்களின் நிதிச்சுமையை குறைக்கும் நோக்கத்தில் மத்திய அரசு சிலிண்டருக்கு மானியம் வழங்குகிறது. இந்தத் தொகையை பயனாளிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. முதலில் சிலிண்டருக்கான முழு தொகையையும் கொடுத்து சிலிண்டர் வாங்க வேண்டும். அதன்பிறகு மானியத்தொகை வங்கிக்கணக்கில் வந்து சேரும். ஆனால் 2020ஆம் ஆண்டு நிதிச் சுமை காரணமாக மானியம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதன் பிறகு மீண்டும் மானியம் வழங்கப்பட்டது. இருந்தாலும் மானியம் பலருக்கு வரவில்லை என்றும் மானியத்தொகை குறைக்கப்பட்டு விட்டதாகவும் வாடிக்கையாளர்கள் தரப்பில் தொடர்ந்து புகார்கள் எழுந்தன. தற்போது மத்திய அரசு பொது மக்களுக்கு ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதனால் எல்பிஜி கேஸ் சிலிண்டர்கள், பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. அதாவது கேஸ் சிலிண்டருக்கு 200 ரூபாய் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி சிலிண்டர்களின் புதிய விலை நேற்று முன்தினம் அமலுக்கு வந்தது. நீண்ட காலமாக எரிபொருளின் பணவீக்கம் குறித்து பொதுமக்கள் புலம்பி வந்தனர். தற்போது மத்திய அரசு இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. சாமானிய மக்களின் நலனை கருதி இந்த முடிவை அரசு எடுத்துள்ளது.
நவம்பர் மாதத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக கலால் வரியை குறைப்பதன் மூலம் அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசின் இந்த மானிய அறிவிப்பு ஒரு சிலருக்கு மட்டுமே பயனளிக்கும் என்று கூறப்படுகின்றது. உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகள் மட்டுமே இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ள முடியும். ஒரு வருடத்தில் 12 சிலிண்டர்களுக்கு மட்டுமே 200 ரூபாய் மானியம் கிடைக்கும். இந்த அறிவிப்பால் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.