Categories
உலக செய்திகள்

 சிலியில் நிலநடுக்கம்… வீட்டை விட்டு வெளியேறிய மக்கள்…!!!

தென் அமெரிக்க நாடுகளில் உள்ள ஒரு நகரில் நேற்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் கட்டிடங்களில் அதிர்வு ஏற்பட்டது.

தென்னமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியின் மத்திய பகுதியில் பசிபிக் பெருங்கடலை ஒட்டி அமைந்துள்ள ஓவல்லே நகரில் நேற்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 7 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 17 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.

சில நிமிடங்கள் நீடித்த அந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் ஆகிய கட்டிடங்கள் பயங்கரமாக அதிர்ந்தன. அதனால் அச்சம் கொண்ட மக்கள் அனைவரும் அலறி அடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி வீதிக்கு வந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. அதே சமயத்தில் பெரிய அளவில் பொருள் சேதங்கள் எதுவும் ஏற்பட்டுள்ளதா என்பதும் தெரியவில்லை.

Categories

Tech |