Categories
உலக செய்திகள்

சிலி நாடு: மாணவ அமைப்பினரின் போராட்டம்…. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!!!

தென்அமெரிக்கா நாடுகளில் ஒன்றான சிலியில் உணவு பொருட்களுக்கான மானியம் மற்றும் அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்கான நிதிஒதுக்கீடு போன்றவற்றை அந்நாட்டின் பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாணவ அமைப்பினர் போராட்டம் மேற்கொண்டனர். அந்த நாட்டின் தலைநகர் சாண்டியா கோவில் இப்போராட்டம் நடந்தது. இப்போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி வழங்காததால் மாணவர் அமைப்பினருக்கும், காவல்துறையிருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் வலியுறுத்தினர். இந்நிலையில் இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டதால் அங்கு கலவரம் வெடித்தது. மேலும் காவலர்களின் வாகனங்களை மாணவர்கள் அடித்து உடைத்து விட்டனர். அதன்பின் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை காவல்துறையினர் கலைத்தனர்.

இதற்கிடையில் தீ வைக்கப்பட்ட ஒரு பேருந்தை அணைக்க காவல்துறையினர் தண்ணீர் பீரங்கி டிரக்குகளை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனினும் சம்பவங்கள் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை எனவும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |