Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சிலைகளுக்கு அடியில் இருந்த பாம்பு…. அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

சிற்பக்கலை கூடத்திற்குள் புகுந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக பிடித்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி ராஜாஜி சாலையில் தனியார் சிற்பக்கூடம் அமைந்துள்ளது. இங்கு சாலை ஓரத்தில் கற்கள் மற்றும் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது சிலைகளுக்கு அடியில் பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி சுமார் 3 அடி நீளம் உடைய விரியன் பாம்பை பத்திரமாக பிடித்தனர். இதனை அடுத்து வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட பாம்பு காட்டுப்பகுதியில் விடப்பட்டது.

Categories

Tech |