Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சிலை கடத்தல் வழக்கில்…. ரஜினி ரசிகர் மன்ற இணை செயலாளர் கைது…. பாராட்டிய டி.ஜி.பி. சைலேந்திரபாபு….!!

சாமி சிலைகள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த ரஜினி ரசிகர் மன்ற இணை செயலாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் அலெக்சாண்டர் (வயது 52) என்பவர் வசித்து வருகின்றார். பா.ஜ.க. நிர்வாகியான இவர் கோவில் சிலைகளை பதுக்கி வைத்திருப்பதாகவும் அதனை ரூ.5 கோடிக்கு விற்பனை செய்ய முயற்சிப்பதாகவும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த 3-ந் தேதி நடத்திய சோதனையில் ராமநாதபுரம் அருகே உள்ள கூரிச்சாத்த அய்யனார் கோவில் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 7 சாமி சிலைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

இதுகுறித்து அலெக்சாண்டர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த காவல்துறை அதிகாரிகளான நாகநரேந்திரன், இளங்குமரன், விருதுநகர் கருப்பசாமி மற்றும் கணேசன் ஆகிய 5 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள நபர்களை தேடி வந்த நிலையில் ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் காய்கறி கடை நடத்தி வரும் ராஜேஷ் (வயது 37) என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இவர் ராமநாதபுரம் ரஜினி ரசிகர் மன்ற இணைச் செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட ராஜேஷை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் சிலை கடத்தல் வழக்கில் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த கூடுதல் துணை சூப்பிரண்டு அதிகாரி மலைச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகபூபதி, விஜயகுமார், கணேசன் உள்ளிட்ட தனிப்படையினரை டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டியுள்ளார்.

Categories

Tech |