Categories
மாநில செய்திகள்

சிலை கடத்தல் வழக்கு குறித்து…. நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு….!!!!

இந்தியாவின் சிலைகளை திருடி வெளி நாடுகளில் விற்பனை செய்யும் சுபாஷ் சந்திர கபூர் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்து இருந்தார். அவற்றில், “இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சிலைகள் கடத்தலில் ஈடுபட்டதாக கடந்த 2008ம் வருடம் கைது செய்யப்பட்டேன். இவ்வழக்கு கும்பகோணம் நீதிமன்றத்தில் சாட்சியங்கள் விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். நீதிமன்றத்தில் முன்பே விசாரணை செய்த சாட்சியங்களை மீண்டுமாக விசாரிக்க வேண்டும் என கும்பகோணம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

ஆகவே கும்பகோணம் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்துசெய்து மீண்டுமாக சாட்சியங்களை விசாரணை செய்ய உத்தரவிடவேண்டும்.” என மனுவில் குறிப்பிட்டிருந்தார். இவ்வழக்கு நீதிபதி சக்திகுமார் சுகுமார குரூப் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், காலஅவகாசம் கோரப்பட்டது. அதனை தொடர்ந்து அரசு தரப்பில், 5 ஆண்டுகளாக இந்த வழக்கின் சாட்சியங்கள் விசாரணை கும்பகோணம் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணையை தாமதப்படுத்துவதற்கென மனுதாரர் தரப்பில் சாட்சியங்களை மீண்டுமாக விசாரணை செய்ய வேண்டும் என வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது.

உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படியே கும்பகோணம் நீதிமன்றத்தில் மனுதாரரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது என்று வாதம் வைக்கப்பட்டது. அதன்பின் நீதிபதி, அரசு தரப்பில் தெரிவித்ததை போன்று வழக்கு விசாரணையை தாமதப்படுத்துவதற்காகவே மனுதாரர் வழக்கு தொடர்ந்துள்ளார். அத்துடன் கால அவகாசம் கோரி வருகிறார். இவ்வழக்கு விசாரணை செப்டம்பர் 27ம் தேதி ஒத்திவைக்கப்படுகிறது. எனவே அன்றைய தினம் மனுதாரரின் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராக வேண்டும். இல்லையெனில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை தொடருவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்தார்.

Categories

Tech |