காஜல் அகர்வாலுக்கு சிங்கப்பூரில் மெழுகு சிலை திறக்கப்படுகிறது.
தமிழ், தெலுங்கு போன்ற மொழி சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்துகொண்டிருப்பவர் காஜல் அகர்வால்ஆவார் .இவர் தமிழில் முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து நடித்துள்ளார் . இவர் மாற்றான்,துப்பாக்கி, ஜில்லா,விவேகம் போன்ற படங்களிலும், இந்த ஆண்டு2019 -ல் வெளியான கோமாளி, திரைப்படத்தில் நடித்து மக்களிடையே பாராட்டைப் பெற்றார் .
இப்போது இவருக்கு சிங்கப்பூரில் அமைந்துள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியத்தில் மெழுகால் ஆன சிலை ஒன்றை நிறுவ உள்ளனர்.மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியம் லண்டன் உட்பட பல்வேறு நாடுகளில் அமைந்துள்ளது . இந்த அருங்காட்சியகத்தில் அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்களின் மெழுகு சிலை நிறுவப்பட்டிருக்கும் .
இதுபோலவே பிப்ரவரி 5ஆம் தேதி காஜல் அகர்வாலின் மெழுகு பொம்மை திறக்கப்படுகிறது. இதற்காக காஜல் சிங்கப்பூர் செல்கிறார் . இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் காஜல் பகிர்ந்துள்ளார் .அதில் ‘நானும் என்னோட இன்னொரு பாதியும் சேர்ந்து சிங்கப்பூரில் உங்களை 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5ம் தேதி சந்திக்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.