சிலோன் சிக்கன் ப்ரை செய்ய தேவையான பொருட்கள்:
தோல் உரித்த கோழி – 1 கிலோ
வற்றல் – 8
ரீபைண்டு ஆயில் – 5 கரண்டி
மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டேபிள்ஸ்பூன்
மல்லி – 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 2 பல்
தக்காளி – 3
வெங்காயம் – 4
மூட்டை – 4
செய்முறை:
முதலில் கோழியின் தோலை நீக்கி விட்டு சிறு துண்டுகளாக வெட்டி சுத்தம் செய்து கொள்ளவும். அதனையடுத்து மிக்சி ஜாரில் வற்றல், மிளகு, சீரகம்ம், மல்லி, இஞ்சி, பூண்டை சேர்த்து மசாலாவாக அரைத்து கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து அதில் கறித்துண்டுகளை சேர்த்து அதனுடன் அரைத்து வைத்த மசாலா பொருள்கள், உப்பு, மஞ்சள் தூள் போட்டு நீர் இல்லாமல் நன்கு வேக வைக்கவும். வெந்தபின் ஆற வைத்து கோழி துண்டுகளில் உள்ள எலும்புகளை நீக்கி கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் போட்டு வதங்கியபின் வேகவைத்த கரித்துண்டுகளை அதில் போட்டு 5 – 10 நிமிடம் வரை வதக்கி கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முட்டைகளை உடைத்து ஊற்றி உப்பு சேர்த்து நன்கு அடித்து, அதில் ஊற்றி நன்கு வதக்கி தனியாக பொடிமாஸ் கொள்ளவும். மேலும் அதனை கோழி வறுவல் உடன் சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்கி எடுத்தால் சுவையான சிலோன் சிக்கன் ப்ரை ரெடி.