நடிகை சில்க்சுமிதாவின் வாழ்கை வரலாற்றை அனுசியா பரத்வாஜ் நடிப்பதாக கூறிய நிலையில் அவர் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
திரையுலகின் முன்னணி கவர்ச்சி நடிகையாக பிரபலமானவர் சில்க் சுமிதா அவர்கள். சில்க் சுமிதா 1996ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் வாழ்க்கை கதையை இந்தியில் “டர்டி பிக்சர்” என்ற பெயரில் படம் எடுத்தனர். அப்படத்தில் நடித்த வித்யாபாலனுக்கு தேசிய விருது கிடைத்தது.
மேலும் சில்க் ஸ்மிதா அவருடைய வாழ்க்கை கதை தமிழிலும் படமாக வர இருக்கிறது. அப்படத்தின் தலைப்பு “அவள் அப்படித்தான்” என்று சொல்லப்படுகிறது . இப்படத்தை மணிகண்டன் அவர்கள் இயக்குகிறார். மேலும் தெலுங்கு நடிகையான அனுஷ்கா பரத்வாஜ் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில்க்சுமிதா போல போஸ் கொடுத்த படத்தை பதிவிட்டிருக்கிறார். ஹோலிவுட் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
எனவே சில்க் சுமிதா கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகையான அனுஷ்கா பரத்வாஜ் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது.” மேலும் அனுசியா பரத்வாஜ் இதற்கு மறுப்பு தெரிவித்து அவருடைய டுவிட்டர் பக்கத்தில் நான் சில்க் சுமிதா வாழ்க்கை வரலாற்றில் நடிக்கவில்லை என கூறினார்”.