மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக ஆசிரியரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள இனாம் குளத்தூரில் ஹாஜியார் முகமது யூசுப் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் முருகேசன் என்பவர் ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதி கொண்டிருந்தபோது முருகேசன் ஒரு மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி தனது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு கோபமடைந்த உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் 300-க்கும் மேற்பட்டோர் பள்ளியின் முன்பு குவிந்தனர்.
இந்நிலையில் அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு முருகேசனை சக ஆசிரியர்கள் அறையில் பூட்டி வைத்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் நடத்திய விசாரணையில் முருகேசன் அந்த மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது உறுதியானது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முருகேசனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.