ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு 70 அடி சாலையில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளிக்கு அருகே நின்று கொண்டிருந்த வாலிபர் பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகளை கேலி செய்து சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை பார்த்த பொதுமக்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் அந்த வாலிபர் ஆற்காடு டவுன் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.
இதனையடுத்து போலீசா நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பது தெரியவந்தது. ஆற்காட்டில் இருக்கும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படித்து முடித்த வேல் முருகனுக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.