தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் பூமிகா. இவர் நடிகர் சூர்யாவுடன் இணைந்து சில்லுனு ஒரு காதல், நடிகர் விஜயின் பத்ரி, ரோஜாக்கூட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். நடிகை பூமிகாவின் முன்பே வா என்ற பாடல் இன்றளவும் ரசிகர்களால் பெருமளவு ரசிக்கப்படுகிறது. இவர் தற்போது தெலுங்கு மற்றும் பாலிவுட் சினிமாக்களில் மட்டுமே நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான சீதாராமம் திரைப்படத்திலும் நடிகை பூமிகா முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
கடந்த 2007-ம் ஆண்டு நடிகை பூமிகா யோகா பயிற்சியாளர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு கடந்த 2014-ம் ஆண்டு யாஷ் என்ற மகன் பிறந்தார். இந்நிலையில் நடிகை பூமிகா தன்னுடைய கணவன் மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படத்தை இணையதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நடிகை பூமிகாவுக்கு இவ்வளவு பெரிய மகனா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் நடிகை பூமிகாவின் குடும்ப புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.