Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சில நாட்களாக அதிகரித்து வருகிறது… ஒரே நாளில் உச்சகட்டம்… சிவகங்கையில் கோர தாண்டவம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரேநாளில் புதிதாக 50 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரனோ தொற்று பாதிப்பு சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 50 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் இலுப்பைகுடியில் உள்ள இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் நேற்று முன்தினம் வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மையத்தில் ஏற்கனவே 17 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இந்நிலையில் தற்போது அவர்கள் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இது தவிர மானாமதுரை, காரைக்குடி, கோட்டையூர், சிவகங்கை, தேவகோட்டை, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் 50 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 126 பேர் சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 15 பேர் பூரண குணமடைந்து நேற்று முன்தினம் வீடு திரும்பினர்.

Categories

Tech |