Categories
தேசிய செய்திகள்

சில நாட்களுக்கு முன்புதான் பேசினேன்…. பிரதமர் மோடி இரங்கல்….!!!!

முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் (91) காலமானார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் ஐந்து முறை ஆசியப் போட்டிகளில் தங்கம் வென்றவர். காமன்வெல்த் மற்றும் தேசிய போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைத்தவர். இவரது வாழ்க்கை “பாக் மில்கா பாக்” என்ற பெயரில் படமாக உருவானது. இவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் கொரோனா காரணமாக மரணமடைந்த முன்னாள் தடகள வீரர் மில்கா சிங்கொடு சில நாட்களுக்கு முன்புதான் உரையாடியதாக கூறிய பிரதமர் மோடி, அதுதான் அவருடனான இறுதி உரையாடலாக இருக்கும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்று பதிவு செய்தார். நாட்டின் கனவுகளையும் கற்பனைகளையும் கைப்பற்றியவர். எண்ணிலடங்காத இந்தியர்களுக்கு உத்வேகமும் அளித்தவர். இவரது வாழ்க்கை இளம் தலைமுறையினருக்கு பாடமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |