Categories
உலக செய்திகள்

சில நிமிடங்களில் அதிகரித்த சிக்னல் பயனாளர்கள்… என்ன காரணம்?… கிண்டலடித்த சிக்னல் செயலி…!!!

வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட செயலிகள் சில நிமிடங்கள் செயலிழந்த நிலையில் பயனாளர்கள் அனைவரும் சிக்னல் செயலியைப் பயன்படுத்த தொடங்கினர்.

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. அதில் வாட்ஸ் அப் செயலி அனைத்து விதமான உரையாடல்களும் பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ஃபேஸ்புக் மெசேஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவை 45 நிமிடங்கள் முடங்கியது. உலகம் முழுவதும் பேஸ்புக் நிறுவனத்தின் 4 சேவைகளும் திடீரென முடங்கியதால் பயனாளர்கள் அவதிக்குள்ளாகினர். இதனையடுத்து பயனாளர்கள் தொடர்ந்து புகார் கொடுத்ததை அடுத்து 45 நிமிடங்களுக்கு பிறகு நான்கு சமூக வலைத்தளங்களில் செயல்படத் தொடங்கின.

இந்நிலையில் வாட்ஸ்அப் பேஸ்புக் உள்ளிட்ட செயலிகள் சில நிமிடங்கள் செயல் இழந்த காரணத்தால், பயனாளர்கள் அனைவரும் சிக்னல் செயலியை பயன்படுத்த தொடங்கினார். அதனால் அனைவரையும் வரவேற்ற சிக்னல் செயலி, தொழில்நுட்பத்துறையில் அல்லாதோருக்கும், வார இறுதியில் தொழில்நுட்பக்கோளாறு எவ்வாறு இருக்கும் என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியாது என்று கிண்டலடித்து உள்ளது.

Categories

Tech |