திமுகவின் தேர்தல் அறிக்கை குறித்து, அக்கட்சியின் எம்.பி டி.கே.எஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, இந்த அரசாங்கம் செய்யத் தவறிய பல்வேறு மக்கள் நல திட்டங்கள், குறிப்பாக விவசாயிகளின் நலன், பெண்கள் நலன், மாணவர்கள் நலன், வேலை வாய்ப்பற்று தவிக்கும் இளைஞர்கள் நலன் ஆகியவற்றை குறித்து எங்கள் தேர்தல் அறிக்கை சொல்லியிருக்கிறது.
இந்த மக்களுக்கெல்லாம் நன்மை செய்யும் வகையில், விவசாயிகள் வாழ்வு வளம் பெறும் வகையில், மாணவர்களுடைய கல்வி உயரும் வகையில், படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில், பெண்களுக்கு உரிய சமத்துவம் கிடைக்கும் வகையில் திட்டங்களை நாங்கள் வகுத்து இருக்கிறோம் .
தேர்தல் அறிக்கையில் இருந்து பூரண மதுவிலக்கை இந்த முறை அது மட்டும் எந்த தன்மை இல்ல படிப்படியாக அமல்படுத்த வேணுமா ? எந்த ஒரு தகவல் இல்லை . அதற்கான காரணங்கள் ஏதாவது மது விலக்கு இந்த தேர்தல் அறிக்கையில் இல்லாததற்கு காரணமெல்லாம் இல்ல. நாங்கள் சில விஷயங்களை வந்து ஆட்சிக்கு வந்த பிறகு செய்யும் போது நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்.
சிலவற்றை ஆட்சிக்கு வந்த பிறகு தான் அதற்கான திட்டமிடல் தொடங்கும், சில வாக்குறுதிகளை நாங்கள் வழங்குவது கட்டாயமாக செய்வோம் என்பது. தேர்தல் அறிக்கையில் உள்ளதை மட்டும் தான் . ஆட்சிக்கு வந்த பிறகு செய்வோம் என்று இல்லை.எது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தேவையோ ? எது தமிழ்நாட்டு மக்கள் நலனுக்கு தேவையோ… அதையெல்லாம் தொடர்ந்து செய்வோம் என அவர் தெரிவித்தார்.