3 பேரை அரிவாளால் வெட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சாத்தினிபட்டி கிராமத்தில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் வசிக்கும் தனது சித்தப்பா மாணிக்கம் என்பவரது குடும்பத்தினருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக சொத்து பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.இந்நிலையில் நேற்று மாணிக்கத்தின் வீட்டிற்கு சென்ற மணி சொத்தில் 20 சென்ட் இடம் வேண்டும் என்று கூறி பிரச்சனை செய்துள்ளார். இதனால் மாணிக்கத்தின் குடும்பத்தினருக்கும் மணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆத்திரமடைந்த மணி தான் கொண்டுவந்த அரிவாளால் மாணிக்கம் அவரது மனைவி மஞ்சு, மகள் ஜெயா ஆகியோரை சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த 3 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாணிக்கத்தின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மணியை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்