சிவகங்கையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.17 லட்சத்து 19 ஆயிரம் பணத்தை பறக்கும் படையினர் வாகன சோதனையின்போது பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் பறக்கும் படையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வாகனங்களில் ரூபாய் 50 ஆயிரத்திற்கும் மேல் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்றால் பணம் பறிமுதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இலந்தங்குடிபட்டி பகுதியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
அப்போது அந்த வழியாக வந்த மொட்டை நிறுத்தி சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது காரைக்குடி பகுதியில் உள்ள கோட்டையூரில் வசித்து வரும் வைரவபிரகாஷ் என்பவரிடமிருந்து ரூ.17 லட்சத்து 19 ஆயிரம் பணம் இருந்ததை பறக்கும் படையினர் கண்டுபிடித்தனர். ஆனால் அந்த பணத்திற்கான உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை. இதையடுத்து 17 இலட்சத்து 19 ஆயிரம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து சிவகங்கை மாவட்டம் அரசு கருவூலத்தில் ஒப்படைத்துள்ளனர்.