சிவகங்கையில் அரசு மருத்துவமனை எம்.ஆர்.ஐ ஸ்கேன் சென்டர் தொடக்க விழா நான்காம் ஆண்டாக நடைபெற்றுள்ளது.
சிவகங்கையில் அரசு மருத்துவமனை எம்.ஆர்.ஐ ஸ்கேன் சென்டர் உள்ளது. அந்த ஸ்கேன் சென்டருக்கு நான்காம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு டீன் ரத்தினவேல் தலைமை தாங்கியுள்ளார். மேலும் ரேடியோ டைகனாஸ்டிக் துறையை இந்த கல்லூரியில் இன்னும் வளர்ச்சி நிலைக்கு கொண்டுவர வேண்டும் என்று அவர் கூறினார். அப்படி வளர்ச்சிபெற செய்தால் தான் முதுகலை ரேடியாலஜிஸ்ட் படிப்பை தொடங்க முடியும் என்று கூறியுள்ளார்.
ஏழை குடும்பத்தினர் இங்கு உள்ள எம்.ஆர்.ஐ ஸ்கேன் சென்டர் மூலம் குறைந்த கட்டணத்திலும், முதல்வர் காப்பீட்டு திட்டம் மூலம் இலவசமாகவும் பயன்பெறுகின்றனர். மேலும் அவர் கூறுகையில் ஏழைகளுக்கு உதவும் வகையில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருபவர்களுக்கு அனைவரும் பணியாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த விழாவில் மருத்துவ கண்காணிப்பாளர் குணா, மருத்துவ அலுவலர் மீனா, உதவி நிலைய மருத்துவர் சூரியநாராயணன், வித்யாஸ்ரீ, மிதுன் கிருஷ்ணா டயாலஜிஸ்ட் தென்பிராந்திய தலைவர் அனிஷ்ஷா, தலைமை ரேடியோ டெக்னீசியன் வேணுகோபால் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.