Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சிவகங்கை காரைக்குடி சட்டமன்ற தொகுதியில்…. இவங்க தான் போட்டியிட போறாங்க….. இறுதிகட்ட வேட்பாளர்கள் அறிவிப்பு…!!

தேர்தலில் போட்டியிட சிவகங்கை காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் இறுதி வேட்பாளர்களாக 13 பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மாங்குடி, பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் எச்.ராஜா உள்ளிட்ட 26 பேர் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனுக்களை தேர்தல் அதிகாரிகள் வேட்புமனு பரிசீலனையில் தள்ளுபடி செய்துள்ளனர். வேட்பு மனுக்கள் வாபஸ் வாங்குவதற்கு நேற்று தான் கடைசி நாளாகும். இந்நிலையில் நான்கு பேர் தங்களுடைய வேட்பு மனுவை வாபஸ் வாங்கியுள்ளனர். சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு 13 பேர் இறுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சின்னங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

சிவகங்கை காரைக்குடியில் தேர்தலில் போட்டியிடும் 13 வேட்பாளர்களின் கட்சி பெயர் விவரம் சின்னம் ஆகியவை பின்வருமாறு;-

1. எச்.ராஜா (பாரதிய ஜனதா)- தாமரை

2. தேர்போகி வே பாண்டி (அ.ம.மு.க.)- குக்கர்

3. நா.பாலுச்சாமி (பகுஜன்சமாஜ் கட்சி)- யானை

4. ந.மீனாள் (சுயே)- பரிசு பெட்டகம்

5. அ. கணேசன் (சுயே)- கியாஸ் சிலிண்டர்

6. கா. வேலு (சுயே)- கெண்டி

7. பா. வனிதா (புதிய தமிழகம் கட்சி)- தொலைக்காட்சி பெட்டி

8. துரை மாணிக்கம் (நாம் தமிழர் கட்சி)- கரும்பு விவசாயி

9. சா. மாங்குடி (காங்கிரஸ்)- கை

10. ம. நைனா முகமது (சுயே)- ஆட்டோ ரிக் ஷா

11. அ.பரமசிவம் (சுயே)- நடைவண்டி

12. க. ராஜ்குமார் (அண்ணா எம்.ஜி.ஆர்.திராவிட மக்கள் இயக்கம்)- கடாய்

13. ச.ராஜ்குமார் (மக்கள் நீதி மையம்)- டார்ச் லைட்

Categories

Tech |