இனி புதன்கிழமை தோறும் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் செய்திகுறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பு தடுப்பூசி முகாம் 300 இடங்களில் நடைபெறுகின்றது. தமிழக அரசின் உத்தரவின்படி சிவகங்கையில் இதுவரை 37 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு இருக்கின்றது. 12 வயதுக்கு மேற்பட்ட 1 லட்சத்து 14 ஆயிரத்து 106 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கின்றது.
மேலும் பொது மக்களுக்கு உதவிகரமாக இருக்கும் வகையில் இனி வாரம் தோறும் புதன்கிழமையில் மருத்துவ கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. ஆகையால் இதுவரை தடுப்பூசி செலுத்தாதோர் புதன்கிழமை அன்று தங்கள் பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு சென்று தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என கூறியுள்ளார்.