விருதுநகரில் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவர் விபத்தில் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் கீழ ஒட்டம்பட்டி தெற்கு தெருவில் வசித்து வருபவர் அய்யனார். 63 வயதான இவர் நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் சிவகாசி-சாத்தூர் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானார். எதிரே வந்த தனியார் பஸ் ஒன்று, அய்யனார் மீது இந்த விபத்து ஏற்பட்டது.
இதில் அய்யனருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதை கண்ட அருகில் இருந்தவர்கள் விபத்தில் சிக்கிய அய்யனாரை மீட்டு அருகில் இருந்த அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அய்யனாரை பரிசோதனை செய்துவந்த மருத்துவர் , அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதை குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குபதிவு செய்து எதிரே வந்த தனியார் பஸ்ஓட்டுநர் மாணிக்கத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.