சிவகாசி அருகே புதுப்பெண் கொலை செய்யப்பட்டது எப்படி என்று கைதான 3 பேர் போலீசாரிடம் பரபரப்பு தகவல் அளித்துள்ளனர்.
சிவகாசியில் விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல்,ஆலமரத்துப்பட்டி ரோட்டில் உள்ள பெரியார் காலணியில் 24 வயதான செல்வபாண்டியன் என்பவருக்கும் திருத்தங்கல் சத்யா நகரை சேர்ந்த 24 வயதான பிரகதி மோகினி என்பவருக்கும் ஒன்றரை மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த சனிக்கிழமையன்று வீட்டில் மற்ற அனைவரும் வேலைக்கு செல்ல புது பெண் பிரகதி மோனிகா மட்டும் தனியாக இருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த சிலர் பிரகதி மோனியின் கழுத்தை அறுத்து விட்டு தாலி மற்றும் ஒரு பவுன் சங்கிலியை பறித்துச் சென்றனர்.
இச்சம்பவம் குறித்து அப்பகுதியை சேர்ந்த 5 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். முதற்கட்ட விசாரணையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் முழு விவரமும், அவர்கள் தலைமறைவாக இருந்து வந்ததும் தெரியவந்தது. இதற்கிடையில் நேற்று காலை 7 மணிக்கு சிவகாசி இன்ஸ்பெக்டர் இமானுவேல் ராஜ்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் இருந்தபோது அப்பகுதியைச் சேர்ந்த 20 வயதான கோடீஸ்வரனும் 19 வயதான சேகரும் சிக்கினர். அவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் இருவரும் புதுப்பெண் பிரகதி மோனியை கொலை செய்துவிட்டு நகையுடன் தப்பியவர்கள் என தெரியவந்தது. மேலும் விசாரணையில் இவர்கள் பட்டாசு ஆலையில் வேலை செய்து வந்ததும் தங்களுக்கு செலவுக்குப் பணம் இல்லாததால் நகைக்காக வீடு புகுந்து பிரகதி மோனியை கழுத்தை அறுத்து கொன்றதாக வாக்குமூலம் அளித்தனர்.
மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தியபோது கோடீஸ்வரனின் தாய் பரமேஸ்வரிகும் இது தெரியும் என கைதான 2 பேரும் போலீசாரிடம் கூறியுள்ளனர். கோடீஸ்வரன் மட்டும் சேகரின் வீடுகளில் இருந்து நகைகள் மற்றும் தாலி பறிமுதல் செய்யப்பட்டது.