சிவகாசி அருகே குழாய் கம்பெனியில் பட்டாசுகள் வெடித்து கட்டிடம் தரைமட்டம் ஆனதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மேற்கு நேருஜி நகரில் இருக்கும் குழாய் கம்பேனியில் சட்ட விரோதமாக பதுக்கிய பேன்சி ரக பட்டாசுகள் வெடித்து 2 மாடி கட்டிடம் தரைமட்டம் ஆனது. இது குறித்து தகவலறிந்து வருவாய் துறை, காவல்துறை, தீயணைப்பு துறையினர் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்தனர்.. இதையடுத்து கம்பெனியில் பணிபுரிந்த மனோஜ்குமார், வேல்முருகன் ஆகிய இருவரை தீயணைப்பு துறையினர் படுகாயங்களுடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. அங்கு இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்..
மேலும் பஞ்சவர்ணம், கார்தீஸ்வரி, சமீதா ஆகியோரை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.. தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது.. இந்த சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது..