Categories
அரசியல் மாவட்ட செய்திகள் விருதுநகர்

சிவகாசி சட்ட மன்ற தொகுதி: மக்களின் கோரிக்கைகள் எதிர்பார்ப்புகள் என்ன ?

சிவகாசி என்றாலே பட்டாசும், அச்சுக் கலையும் தான் அனைவருக்கும் நினைவு வரும்.வடக்கே காசி தெற்கே தென்காசி நடுவே சிவகாசி என சொல்வது வழக்கம். மேலும் எண்ணற்ற சிறு குறு தொழில்கள் உள்ளதால் குட்டி ஜப்பான் என புகழ் பெற்றது சிவகாசி. சிவகாசி சட்டமன்ற தொகுதி அதிமுக 5 முறையும் வெற்றி பெற்றுள்ளது. திமுக, காங்கிரஸ்,தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகள் தலா 2முறையும், சுதந்திரா கட்சி, ஜனதா கட்சி, மதிமுக தலா 1 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

2011 ஆம் ஆண்டு முதல் கடந்த 10 ஆண்டுகளாக சிவகாசி தொகுதியின் எம்எல்ஏவாக இருப்பவர் பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி. சிவகாசி சட்டமன்ற தொகுதியில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 2,60, 941. தொழில் நகரமான சிவகாசியில் போதுமான சுகாதார வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை என்பது குற்றச்சாட்டு. சிவகாசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலையில் உள்ள சாட்சியாபுரம் ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை.

தீப்பெட்டி, பட்டாசு மற்றும் அச்சு தொழில்கள் கடந்த 10 ஆண்டுகளாக வளர்ச்சி காணாததால் தொழில் நகரம் என்ற பெயரை பறிபோய்விடும் போல உள்ளது என நகர மக்களின் வேதனை. புதிய பேருந்துநிலையம் பெயரளவுக்கே திறக்கப்பட்டிருக்கிறது. எனவே பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை ஆகும். தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பணிகள் முறையாக நடைபெறவில்லை என்றும், குழாய்களை பதிக்க தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாததால் மக்கள் கடும் சிரமங்களை சந்திக்க நேர்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வசிக்கும் திருத்தங்கள் பகுதியில் குடிநீர் கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை என்ற புகார் உள்ளது. சிவகாசி மாநகராட்சி ஆக்கப்படும் என்ற முதலமைச்சரின்  அறிவிப்பு எந்த முன்னேற்றமும் இன்றி வைத்து அறிவிப்பாகவே உள்ளது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திருத்தங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு கொண்டுவர படாமல் காட்சிப் பொருளாகவே உள்ளது மக்களை வேதனையடைய செய்துள்ளது.

பால்வளத்துறை அமைச்சராக உள்ள கே.டி .ராஜேந்திர பாலாஜி 10 ஆண்டுகளாக  எம்எல்ஏவாக இருந்தும் சிவகாசி தொகுதியில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. மக்களின் கோரிக்கைகளையும், ஆளுங்கட்சி அளித்த வாக்குறுதிகளையும் அரசு நிறைவேற்றவில்லை என்ற அதிர்ப்தியே மக்களிடம் அதிகமாக காணப்படுகிறது.

Categories

Tech |