சிவகார்த்திகேயன் வழக்கு தொடர்ந்த நிலையில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார் ஞானவேல்ராஜா.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த சிவகார்த்திகேயன் சென்ற 2019 ஆம் வருடம் வெளியான மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தில் நடித்திருந்தார். கதாநாயகியாக நயன்தாரா நடித்த படத்தை ராஜேஷ் இயக்கி இருந்தார். படம் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களை பெற்று வசூலிலும் சரிவை சந்திக்க நேர்ந்தது. இதைத் தொடர்ந்து இந்த படத்திற்கு சம்பளமாக சிவகார்த்திகேயனுக்கு 15 கோடி பேசப்பட்ட நிலையில் 11 கோடி மட்டுமே கொடுத்ததாகவும் அதற்கான டிடிஎஸ் தொகையை வருமான வரித்துறை செலுத்த உத்தரவிடக்கோரி சிவகார்த்திகேயன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
மேலும் அவர் தனக்கு தர வேண்டிய சம்பள நிலுவையை தரும் வரையில் ஞானவேல்ராஜா தயாரிக்கும் படங்களை, வெளியிடும் உரிமையை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என பதில் மனு தாக்கல் செய்திருக்கின்றார் ஞானவேல்ராஜா. மேலும் அவர் மனுவில் கூறியுள்ளதாவது, சிவகார்த்திக்கேயன் கட்டாயப்படுத்தியதால்தான் மிஸ்டர் லோக்கல் படம் எடுக்கப்பட்டது. அதனால் தனக்கு 20 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக கூறியுள்ளார் ஞானவேல்ராஜா. மூன்றாண்டுகளுக்குப் பின்னர் உண்மைகளை மறைத்து தற்போது சிவகார்த்திகேயன் மனு தாக்கல் செய்துள்ளதால் அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவித்திருக்கின்றார். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையை ஏப்ரல் 7ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.