Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ ரிலீஸ் எப்போது?… வெளியான சூப்பர் தகவல்…!!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது .

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர் ‌‌. நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியங்கா அருள்மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார் . மேலும் இந்த படத்தில் வினய், யோகி பாபு, தீபா, அர்ச்சனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

 

Doctor Movie Exclusive Stills - Cinecircles | Latest Movie Gallery | Movie Poster | Latest Actor, Actress photos, gallery, stills

கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது . தற்போது தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பி வருவதை அடுத்து விரைவில் தியேட்டர்கள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் டாக்டர் படத்தை வருகிற ஆகஸ்ட் 15-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |