சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் டான் படத்தின் ஷூட்டிங் அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர், அயலான் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. தற்போது இவர் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் ‘டான்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரியங்கா அருள்மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, சிவாங்கி, சமுத்திரகனி, சூரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
லைக்கா புரொடக்ஷன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். கடந்த பிப்ரவரி மாதம் கோவையில் டான் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு வருகிற ஜூலை 17-ஆம் தேதி சென்னையில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.