சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் டான் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் தற்போது டாக்டர், அயலான், டான் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் டான் படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சூரி, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, காளி வெங்கட், பாலசரவணன், முனீஸ்காந்த், சிவாங்கி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
https://twitter.com/Dir_Cibi/status/1432401293885071362
சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் டான் படத்தின் ஓபனிங் பாடல் நன்றாக வந்துள்ளதாக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் இந்த பாடலை பாடிய அனிருத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார். தற்போது அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது