சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் டான் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர், அயலான் ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதைத் தொடர்ந்து இவர் அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ‘டான்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, காளி வெங்கட், பால சரவணன், ஆர்.ஜே.விஜய், முனீஷ்காந்த், சிவாங்கி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
https://twitter.com/Dir_Cibi/status/1437829407054315526
சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு கல்லூரி மாணவராக நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி டான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கான போட்டோஷூட் முடிந்துவிட்டதாகவும், விரைவில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.