Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

சிவகார்த்திகேயனின் புதிய திரைப்படம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்…!!!

சிவகார்த்திகேயன் திரைப்படத்தில் நடிக்கும் கதாநாயகியின் கதாபாத்திரம் குறித்து தகவல் வெளிவந்துள்ளது.

சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். தன் நடிப்பின் மூலம்  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்துள்ளார். இவரின் திரைப்படம் குறித்து தற்போது புதிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அது என்னவென்றால் சிவகார்த்திகேயன் திரைப்படத்தில் நடிக்கும் ஆங்கில நடிகை குறித்து தகவல் வெளியாகி உள்ளது. சிவகார்த்திகேயன் தற்போது தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடித்து வருகின்றார்.

இத்திரைப்படத்தை வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் சுரேஷ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கின்றது. இப்படத்திற்கு தமன் இசையமைக்கின்றார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஆங்கில நடிகையை தேடி வந்தனர். பின் நடிகை மரியாவை நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர். இத்திரைப்படத்தில் மரியா கதாபாத்திரம் குறித்து தகவல் வெளிவந்துள்ளது. படத்தில் மரியா ஆங்கில ஆசிரியராக நடிக்க உள்ளார். சிவகார்த்திகேயனுக்கு ஆங்கிலம் சொல்லித் தரும்போது காதல் மலர்கிறது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது என தகவல் வெளிவந்துள்ளது.

Categories

Tech |