நடிகர் சிவகார்த்திகேயன் அனுதீப் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்க உள்ளார்.
பிரபல நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர். இவர் ஹீரோவாக நடிப்பது மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் பாடலாசிரியராகவும் பாடகராகவும் தனக்குள் பன்முகத் தன்மைகளை கொண்டுள்ளார். இவர் தற்போது டான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது அனுதீப் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் நடிக்கஉள்ளார். இவர் இந்தப் படத்தில் கடன் பிரச்சனை காரணமாக நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கின்றன. இந்தப் பிரச்சனை காரணமாகவே இவர் நடிப்பைத் தவிர தயாரிப்பிலும் ஈடுபட்டிருக்கின்றோம். மேலும் இதன் காரணமாகவே தெலுங்கு திரை படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார் என கூறப்படுகின்றது.