Categories
சினிமா தமிழ் சினிமா

“சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக வெளிநாட்டு நடிகையா?”…. என்னப்பா சொல்ரீங்க…. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அறிவிப்பு….!!!

சிவகார்த்திகேயனின் SK 20-ல்  ஹீரோயின்னாக வெளிநாட்டு பெண் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் மெரினா படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானார் . இவர் அடுத்தடுத்து படங்களில் நடித்து வெற்றியடைந்து வந்தார். இடையில் சில தோல்விகள் இருந்தாலும் மீண்டு வந்தார். கடைசியாக வெளிவந்த திரைப்படம் இவருக்கு மீண்டும் வெற்றியை தந்தது. இப்போது இவர் “டான்” படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இத்திரைப்படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார் மற்றும் அனிருத் இசையமைக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்திருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தெலுங்கு இயக்குனர் ஜாதி ரத்தனலு இயக்கத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இவர் நடிக்கும் இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. இதன் மூலம் சிவகார்த்திகேயன் தெலுங்கில் நேரடியாக அறிமுகமாகிறார். இத்திரைப்படத்தில் ஹீரோயினாக நடிப்பது சாய்பல்லவியா ராஷ்மிகாவா என கேள்வி வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது இப்படத்தில் வெளிநாட்டு நடிகையான மரியா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏனென்றால் இத்திரைப்படத்தில் ஹீரோ ஒரு வெளிநாட்டு பெண்ணை காதலிப்பதாக கதை இருப்பதால் வெளிநாட்டு பெண்ணை தேர்ந்தெடுத்திருப்பதாக கூறுகிறார்கள்.

 

Categories

Tech |