Categories
சினிமா

சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் ஹீரோயினி சோகம்…. எதற்காக தெரியுமா?…. தவிக்கும் படக்குழுவினர்…..!!!!!!

தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு என்று இரு மொழிகளில் தயாராகி வரும் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் மிக ஆர்வத்துடன் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது காரைக்காலில் மிக விறுவிறுப்புடன் படமாக்கப்பட்டு வருகிறது. அந்த படத்தில் சிவகார்த்திகேயன் வாத்தியாராக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு தந்தையாக நடிகர் சத்யராஜ் நடிக்கிறார். இக்கூட்டணியில் வித்தியாசமான ஹீரோயினி வேண்டும் என்று படக்குழு வெளிநாட்டு ஹீரோயினி ஒருவரை தேர்வு செய்து இருக்கிறது.

உக்ரைன் நாட்டில் இருந்து வந்த அந்த ஹீரோயினி படப்பிடிப்பு தளத்தில் எப்போதும் சோகமாக இருக்கிறாராம். ஏனெனில் தற்போது உக்ரைன் நாட்டில் கடுமையான போர் நடைபெற்று வருவதால், ஹீரோயினி அங்கு உள்ள தன்னுடைய சொந்தங்களை எண்ணி மிகவும் கவலையில் இருக்கிறார். எனினும் ஷார்ட் என்று வந்துவிட்டால் அவர் மிகவும் உற்சாகமாக கலந்துகொண்டு நடிப்பில் அசத்துகிறாராம். இதன் காரணமாக சிவா உட்பட மொத்த படக்குழுவும் அவரின் நடிப்பை பார்த்து மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

ஆகவே அனைத்தையும் மறந்து விட்டு கேரக்டராகவே மாறி நடிக்கும் அவர் ஷாட் முடிந்ததும் மீண்டும் சோகமாக அமர்ந்து விடுகிறாராம். அவரை பார்ப்பதற்கு படக் குழுவினருக்கு மிகவும் பரிதாபமாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அவரை அதில் இருந்து வெளியே கொண்டு வருவதற்காக சிவகார்த்திகேயன் கலகலப்பாக எவ்வளவோ பேசிப் பார்த்தும் அவர் அந்த சோகத்தில் இருந்து வெளியே வராமல் இருக்கிறாராம். இதனால் செய்வதறியாது தற்போது படக்குழுவினர் அனைவரும் தவித்து வருகின்றனர்.

Categories

Tech |