நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து பிரபல தொகுப்பாளர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்திற்கு அவர் வேடிக்கையாக பதிலளித்துள்ளார்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து பிரகாசித்த நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் கலைமாமணி விருது பெற்றார். இளம் வயதிலேயே இந்த விருதை சிவகார்த்திகேயன் பெற்றிருப்பதால் அனைவராலும் பாராட்டுகளை பெற்று வருகிறார். மேலும் நெல்சன் திலீப் குமார் இயக்க சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் ரிலீசாக தயார் நிலையில் உள்ளது. மேலும் இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மேலும் எதிர்பார்ப்பு அதிகமாகியிருக்கிறது.
Neengal matum Trichy ill pirakaamal
Texas ill pirandhu irundhal..
Hollywood laiyum vaithirupargal 6 padalgal…Awesome lyrics @Siva_Kartikeyan na 🤗♥️@anirudhofficial bro ❤️ @ananthkrrishnan bro ❤️ https://t.co/qxE1evczCm
— RJ Vijay (@RJVijayOfficial) February 25, 2021
இப்படத்தில் இடம்பெற்றுள்ள “So Baby” என்ற பாடல் நேற்று வெளியிடப்பட்ட 24 மணி நேரத்திற்குள் மூன்று மில்லியன் பார்வையாளர்களை நெருங்கியுள்ளது. இதனிடையே சிவகார்த்திகேயனை கலாய்த்து பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளரான விஜய் விளையாட்டாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதாவது பிரபல விருது வழங்கும் விழாவில் சிவகார்த்திகேயன், கவிஞர் வைரமுத்துவை பார்த்து கூறிய கவிதை ஒன்றை தற்போது சிவகார்த்திகேயனுக்கு விஜய் கூறியுள்ளார். இதனால் சிவகார்த்திகேயன் “ஆஹா என் பிட்ட எனக்கே போட்டீங்களே” என்று வேடிக்கையாக பதிலளித்துள்ளார்.