துணை வேடத்தில் நடித்து பிரபலமான நடிகர் அளித்த பேட்டி தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
துணை நடிகரான கண்ணன் காதல், கோ உள்ளிட்ட திரைப்படங்களில் துணை நடிகராக நடித்திருக்கின்றார். இந்த நிலையில் இவர் அண்மையில் அளித்த பேட்டியில் கூறியது தற்பொழுது வைரலாகி வருகின்றது. அவர் கூறியுள்ளதாவது, சினிமாவில் நான் அறிமுகமாகிய காதல் திரைப்படம் 2004 ஆம் வருடம் ரிலீசானது. அப்பொழுது சுனாமி மாதிரியான பிரச்சனைகள் இருந்த போதிலும் திரைப்படம் வெற்றி பெற்றது. அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் வந்தது.
இதனால் சினிமாவில் மிகப்பெரிய இடத்தை பிடிப்பேன் என எதிர்பார்த்தேன். ஆனால் அது நடக்கவில்லை. இயக்குனராக வேண்டும் என்ற ஆசையோடு தான் சினிமாவிற்குள் வந்தேன். ஏற்கனவே சங்கர் என்னுடைய தூரத்துச் சொந்தம். அவரிடம் உதவி இயக்குனராக சேரலாம் என நினைத்தேன். அந்த உறவை வைத்து சினிமாவிற்கு நுழைந்து விடலாம் என நான் நினைத்தது தான் என்னுடைய முதல் தவறு. அவர் உறவுகளுக்கு எல்லாம் முக்கியத்துவம் கொடுக்க மாட்டார். திறமை இருப்பவர்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார்.
திறமை இருக்கிறவன் எப்படி வேண்டாமானாலும் முன்னுக்கு வருவான் என எண்ணுபவர் சங்கர். பின் அவருடைய அலுவலகத்தில் இருந்த துணை இயக்குனர் தான் என்னை நடிக்க அறிவுறுத்திய பிறகு நான் நடிக்க ஆரம்பித்தேன். நான் நடித்த திரைப்படங்களும் வெற்றி பெற்றதை தொடர்ந்து படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். சிபாரிசு செய்வது நல்ல விஷயம் தான். சினிமாவில் ஒருவருக்கு சிபாரிசு செய்யலாம். நானும் சிவகார்த்திகேயனும் உறவினர்கள் என்பதால் நியூ இயர் மீட்டில் நாங்கள் சந்திப்போம். ரெமோ திரைப்படத்தை முடித்துவிட்டு ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க அவர் ஒப்பந்தம் ஆகிய இருந்தபொழுது எனக்கு ஏதாவது வாய்ப்பு இருந்தால் சொல்லுங்கள் என அவரிடம் கேட்டிருந்தேன்.
ஃபோன் செய்தும் கேட்டேன். இரண்டு முறை கேட்டும் செய்யவில்லை. மீண்டும் மீண்டும் வற்புறுத்தினால் நன்றாக இருக்காது என அதை விட்டு விட்டேன். சிலர் முதல் வெற்றியை தொட்ட பிறகு நம்மை அழைப்பார்கள். சினிமா துறையில் அப்படி ஒரு நிலை இருக்கின்றது. கடவுள் புண்ணியத்தில் துணை நடிகராக சின்ன புகழ் கிடைத்துள்ளது. நான் இன்னும் நிறைய தூரங்கள் செல்ல வேண்டி இருக்கின்றது.
அதை நான் கடந்து செல்லும் பொழுது நான் அவருக்கு நினைவுக்கு வரலாம். அப்போது என்னை அவர் கூப்பிடலாம். இதை நான் தவறு என சொல்லவில்லை. அவர் நினைத்தால் செய்ய முடியும் என்பது அவருடைய மனசை பொருத்தது. அதை நான் குறை சொல்ல முடியாது. அவரின் மனதிற்குள் நான் இன்னும் செல்லவில்லை என நினைக்கிறேன். எப்பொழுது அவரின் மனதிற்குள் செல்கின்றேனோ அன்னைக்கு அவருடன் நான் இருப்பேன் என கூறியுள்ளார்.