நடிகர் சிவகார்த்திகேயன் ஏழை மாணவியின் டாக்டர் கனவை நிறைவேற்றியுள்ளார்.
தமிழ் திரையுலக பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் பல ஹிட் படங்கள் கொடுத்து நட்சத்திர நாயகனாக வலம் வருபவர். சினிமாவில் ஹீரோவாக நடிக்கும் சிவா நிஜ வாழ்க்கையிலும் பலருக்கு ஹீரோவாக மாறியுள்ளார். அந்த வகையில் தற்போது ஏழை மாணவியின் டாக்டர் கனவை நிறைவேற்றியிருக்கிறார். பேராவூரணி அருகே உள்ள பூக்கொல்லை எனும் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகள் சஹானா.
இவர் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தும் வறுமை காரணமாக மேல்படிப்பு படிக்க முடியாத சூழ்நிலையில் இருந்துள்ளார். இதை அறிந்த நடிகர் சிவகார்த்திகேயன் மாணவி சஹானாவை தன் சொந்த செலவில் நீட் பயிற்சி வகுப்பில் படிக்க வைத்துள்ளார். இந்நிலையில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவி சஹானாவுக்கு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.