சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் ரிலீஸ் தேதி பற்றி தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் இடையில் சில படங்களில் வெற்றி காணாவிட்டாலும் கடைசியாக வெளியான டாக்டர் திரைப்படம் நல்ல வரவேற்பை தந்தது. தற்போது சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி கல்லூரி மாணவர்களாக நடிக்கின்றார்கள். இந்த படத்தில் பிரியங்கா அருள்மோகன் ஹீரோயினாக நடிக்க புகழ், சிவாங்கி, எஸ் ஜே சூர்யா, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
படத்திற்கு அனிருத் இசையமைக்க லைகா நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கின்றது. இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் படத்தின் டீசர் மற்றும் டிரைலர் மே முதல் வாரத்தில் வெளியாகலாம் என்ற செய்தி வெளிவந்துள்ளது. இதனால் ரசிகர்களுக்கிடையே எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.