சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்கும் படத்தில் ஷாருக்கான் பட பிரபலம் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது . இதை தொடர்ந்து இவர் ரவிக்குமார் இயக்கத்தில் நடித்துள்ள அயலான் படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது இவர் அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரியங்கா மோகன், எஸ்.ஜே .சூர்யா, கௌதம் மேனன், சிவாங்கி, சூரி, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். எஸ்.கே புரொடக்ஷன்ஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இதை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அசோக் இயக்க இருக்கிறார். ‘சிங்கப்பாதை’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் சிங்கப்பாதை படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் டுட்லி ஒளிப்பதிவு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஷாருக்கான் நடிப்பில் வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.