சிவகார்த்திகேயன் திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சிவகார்த்திகேயன். இவர் முதலில் சின்னத்திரையில் அறிமுகமாகி பின் வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்தார். இவர் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் தனது நடிப்பால் கவர்ந்து விட்டார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான டான் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்தடுத்து திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகின்றார். தற்போது பிரின்ஸ் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
இதையடுத்து மண்டேலா திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக செய்தி வெளியானது. இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் எஸ்கே பிரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு “மாவீரன்” என தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியானது.
இந்நிலையில் திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க படக்குழு அவரை அணுகியதாக செய்தி வெளியாக இருக்கின்றது. ஆனால் இது குறித்து விஜய் சேதுபதி எந்த பதிலும் அளிக்கவில்லையாம். இதை அறிந்த ரசிகர்கள் இருவரும் இணைந்து நடிந்தால் படம் நன்றாக இருக்கும். ஆனால் இணைந்து நடிப்பார்களா? என்ற செய்தி இதுவரை வெளியாகவில்லை.