ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள சிவகுமாரின் சபதம் படத்தின் புதிய புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் நடிப்பில் வெளியான மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் நடிப்பில் அன்பறிவு, சிவகுமாரின் சபதம் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இதில் சிவகுமாரின் சபதம் படத்தை ஹிப்ஹாப் ஆதியே இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தில் மாதிரி ஜெயின் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ராக் ஸ்டார் ராகுல், விஜே பார்வதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Here's a glimpse of #BahubalikuOruKattappa song from #SivakumarinSabadhamhttps://t.co/JFXm5jcXVK
Worldwide theatrical release this Thursday. Book your tickets now!
— Hiphop Tamizha (@hiphoptamizha) September 27, 2021
ஹிப் ஹாப் ஆதியின் இன்டி ரெபல்ஸ் மற்றும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் சிவக்குமாரின் சபதம் படத்தில் இடம்பெற்ற ‘பாகுபலிக்கு ஒரு கட்டப்பா’ பாடலின் புரோமோ வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.