சிவசங்கர் பாபாவிடம் சிபிசிஐடி போலீஸார் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேளம்பாக்கம் அடுத்த, புதுபாகத்திலுள்ள சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது, பள்ளிச் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வழக்கு தொடரப்பட்டது. வழக்கு பதிவு செய்து இவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இவர் டெல்லியில் மொட்டையடித்து தலைமறைவாக இருந்த சிவசங்கர் பாபாவை டெல்லி காவல்துறை உதவியுடன் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். பின்னர் இவர் சென்னைக்கு அழைத்துவரப்பட்டார்.
இவர் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடல்நலக்குறைவு காரணமாக இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நேற்று முன்தினம் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி தரப்பில் இவரை காவலில் எடுக்க செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இது குறித்து விசாரணை செய்த நீதிபதி தமிழரசி, சிவசங்கர் பாபாவை மூன்று நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு அனுமதி வழங்கியிருந்தது. இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்று விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் அப்பள்ளி ஆசிரியர், ஆசிரியை களையும் அழைத்து விசாரிப்பதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.