பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட சுகில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் மூன்று வழக்குகளில் 30 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை இரு வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மூன்றாவது வழக்கில் கைது செய்வதற்கு சிபிசிஐடி அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அதற்கான ஆதாரங்களை அவர்கள் சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் ஜாமீன் கோரி சிவசங்கர் பாபா தரப்பில் தொடரப்பட்ட வழக்கை செங்கல்பட்டு மகிலா நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் அவருக்கு உதவியாக இருந்த ஆசிரியை சுஷ்மிதா ஆகியோரின் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இரண்டு போக்சோ வழக்குகளிலும் சிவசங்கர் பாபாவின் ஜாமின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.