சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா அந்த பள்ளியை சேர்ந்த மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய விஷயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுறித்து முன்னாள் மாணவிகள் புகார் அளித்தததன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிஐ சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் இவரால் பாலியல் தொல்லைக்கு உள்ளான மாணவிகள் புகார் தர தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. புலன்விசாரணை அதிகாரி குணவர்மன் 9840558992, ஆய்வாளர்-9840669982 எண்களிலும், [email protected] என்ற முகவரியில் மாணவிகள் புகார் அளிக்கலாம் என்று சிபிசிஐடி தெரிவித்துள்ளது.