சிவசேனா உத்தவ் தாக்கரே அணிக்கு ‘தீபச்சுடர்’ சின்னத்தை ஒதுக்கியது இந்திய தேர்தல் ஆணையம்.
சிவசேனா கட்சி பெயரும், வில்லம்பு சின்னமும் முடக்கப்பட்டதால் புதிய சின்னம் மற்றும் பெயர் ஒதுக்க உத்தவ் தாக்கரே கோரி இருந்தார். உதயசூரியன், திரிசூலம், தீபச்சுடர் ஆகிய மூன்றில் ஒரு சின்னத்தை கோரி இருந்தார் சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே. தற்காலிக சின்னம் மற்றும் கட்சி பெயர் கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு தாக்கல் செய்திருந்த உத்தவ் தாக்கரே அணிக்கு தீபச்சுடர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. தாக்கரே தலைமையிலான கட்சிக்கு சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) என பெயர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மும்பை அந்தேரி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் உத்தவ் தாக்கரே அணி போட்டியிடுகிறது. சிவசேனா கட்சி உடைந்து உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே அணிகள் உருவானது.