நாம் ஏதேனும் ஒன்று நமக்கு வேண்டும் என்று நினைத்தால் அதனை இறைவனிடம் கேட்போம். அதேபோன்று ஏதேனும் துன்பம் ஏற்பட்டால் நேரடியாக கோவிலுக்கு சென்று இறைவனிடம் முறையிடுவோம். ஆனால் இங்கு இளைஞர் ஒருவர் சிவபெருமானிடம் கடிதத்தின் மூலமாக தனக்கு வேண்டியவற்றை கேட்டுள்ளார். மதுரை மாவட்டம் அவனியாபுரம் பகுதியில் அமைந்திருக்கும் கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவில் கிபி பதினாறாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
இந்த கோவிலுக்கு வெங்கடேசன் எனும் பக்தர் தினமும் கடிதம் எழுதுவதை வழக்கமாக வைத்திருந்தார். ஆனால் அவரது முகவரியை அவர் ஒருநாளும் குறிப்பிட்டதில்லை. இந்நிலையில் நேற்றும் அவரிடம் இருந்து கடிதம் வந்துள்ளது. அந்த கடிதத்தின் முன் பகுதியில் தினம் எனக்கு போதுமான வருமானம் தாருங்கள் என குறிப்பிட்டிருந்தார்.
இதனை பார்த்த கோவில் நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்து கடிதத்தைப் படித்த போது அம்மா அப்பா சரணம் என்று தொடங்கப்பட்ட அந்த கடிதத்தில் வெங்கடேசன் மதுரையை சேர்ந்த நாடார் பெண் அனுஷா தினம்தினம் என்னுடன் பேச வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து கடிதம் எழுதியிருந்தார். முகவரி குறிப்பிடாமல் இத்தகைய வேண்டுதலை முன்வைத்து சிவபெருமானுக்கு கடிதம் எழுதும் முகம் தெரியாத அந்த மர்ம நபர் யாரென்று கோவில் நிர்வாகிகள் குழப்பத்தில் இருக்கின்றனர்.