Categories
தேசிய செய்திகள்

சிவனேனு தான உட்கார்ந்து இருந்தே… பாகனை தூக்கி வீசிய யானை… வைரலாகும் வீடியோ…!!!

கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தில் வில்வாத்ரிநாதர் கோவிலில் யானை மீது அமர்ந்திருந்த பாகனை யானை தூக்கி வீசிய வீடியோ வைரலாகி வருகிறது.

கேரள மாநிலத்தில் கோவில்களில் தினமும் பூஜை வழிபாடு என நடைபெற்றிருக்கும். அங்கு யானைகள் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படும். அதேபோன்றுதான் கடந்த வியாழக்கிழமை வில்வாத்ரிநாதர் கோவிலில் நடந்த திருவிழாவின்போது யானை அலங்கரிக்கப்பட்டு அதன் மீது பாகன் ஏறி அமர்ந்து இருந்தார். கோவிலில் திருவிழா என்பதால் மேளதாளங்கள் என்று சத்தம் அதிக அளவில் இருந்தது. இதனால் கோபமடைந்த யானை தன் உடலை அங்கும் இங்கும் அசைத்து பாகனை கீழே தள்ளிவிட்டது.

பின்னர் யானை திரும்பி அவரை தாக்க முற்பட்டபோது அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். கோவில் கச்சா சீவேலி சடங்கிற்கான ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்த போது, அங்கிருந்த விளக்குகளை கீழே தள்ளிவிட்டது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக யானை அனைவரையும் தாக்க முற்பட்டது. இதையடுத்து நீண்டநேர முயற்சிக்கும் பிறகு யானை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |