இந்தியா முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தது.அப்போது உத்திரப்பிரதேசம் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் கடும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக பலரும் உயிரிழந்தனர். அப்போது அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் தருண் சுக், மத்திய பிரதேசத்தின் முதல்வர் சிவன் மற்றும் விஷ்ணு இருப்பதால் மத்திய பிரதேசத்திற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உண்டாகாது என அறிவியலுக்குப் புறம்பாக பேசியுள்ளார்.
அதாவது முதல்வர் சிவராஜ் சிங் சவுகானை சிவனாகவும், பாஜக தலைவர் விஷ்ணு தத் ஷர்மாவை விஷ்ணுவாகவும் குறிப்பிட்ட இவர் பேசியுள்ளார். இவரின் இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதுகுறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் புபேந்திரா குப்தா, மத்திய பிரதேச மாநிலத்தில் ஜனவரி முதல் மே மாதங்களுக்கு இடையில் மட்டும் 3.28 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். அப்போது சிவராஜ் சிங் சவுகான், விஷ்ணு தத்தும் எங்கு இருந்தனர் என கேள்வி எழுப்பியுள்ளார்.