சிவரக்கோட்டையில் பேருந்து நிற்க வேண்டும் என கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
திருமங்கலம் அருகே சிவரக்கோட்டை கிராமத்தில் தென் மாவட்டங்கள் வழியாக செல்லும் மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, சாத்தூர், சிவகாசி அரசு போக்குவரத்து பணிமனையில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளும் நின்று செல்ல வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்துள்ளனர். இதற்கு ஏற்கனவே அனுமதி வழங்கி விட்டதாக கூறப்படுகிறது ஆனால் கடந்த சில மாதங்களாக அரசு பேருந்துகள் சிவரக்கோட்டை பேருந்து நிலையத்தில் நின்று செல்லவில்லை. இந்த சூழலில் திருமங்கலத்தில் இருந்து சிவரகோட்டை வழியாக சென்ற அரசு பேருந்தில் சிவரக்கோட்டை பொதுமக்கள் சிலர் ஏறி இருக்கின்றார்கள்.
அவர்களை சிவரக்கோட்டையில் நிறுத்தாமல் இரண்டு கிலோமீட்டர் தூரம் தள்ளி இறக்கிவிட்டு சென்று இருக்கின்றனர். இதனால் கோபம் அடைந்த சிவரக்கோட்டை கிராம மக்கள் மாட்டுத்தாவணியில் இருந்து கோவில்பட்டி சென்ற அரசு பேருந்து சிவரக்கோட்டையில் நிற்கவில்லை என்ற காரணத்தினால் கோவில்பட்டி சென்று விட்டு மீண்டும் திரும்பி வந்த பேருந்தை கிராம மக்கள் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் இது பற்றி தகவல் அறிந்த போலீஸர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை மேற்கொண்டு போராட்டத்தை கைவிட செய்துள்ளனர். அதன் பின் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் பேசும் போது தற்போது கட்டணமில்லாமல் செல்லும் அரசு பேருந்தில் ஏறினால் தங்களை மதிப்பதில்லை மரியாதை குறைவாக பேசுகின்றார்கள். சிவரைக்கோட்டை பயந்து நிலையத்தில் பேருந்துகள் நிற்பதில்லை இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.